வெண்ணிலவே பெண்ணிலவே

நீ சந்தனம் பூசிய வெண்ணிலவாய்
என் மனதை மயக்கிய பெண்ணிலவே...
கார்மேகம் பின்னிய குழலில்
கேரளத்தில் மலர்ந்த சிறு கிளியே......


இமைகள் உறங்கும் இரவுகளில்
உன் நினைவுகள் கனவாய் ஓடுதே...
இடைவெளி இருக்கும் நம் உறவில்
இணைந்து பறப்போம் அந்தக் கனவிலே......


மௌனம் பேசும் மொழிகளில்
நம் நெருக்கம் இன்னும் கூடுதே......

நீ சந்தனம்......

முத்துக்கள் சிதறும் உன் சிரிப்பில்
நெஞ்சமும் துண்டாய் உடையுதே...
வண்ணத்துப்பூச்சி மொய்த்திடும் பூக்களில்
உன் வாசனை தான் இருக்குதே......


பப்பாளியென மேனி பளப்பளக்குது
நெருங்கி வாவென்று எனை அழைக்குது...
விண்மீன் விழிப் பார்வைகளோ?...
மின்சாராமாய் என் உயிர்க் குடிக்குதே.....


தக்காளி பழம் போல் இதழிருக்குது
இழுத்து ருசிக்க மனம் துடிக்குது...
உன் இதழோடு இதழ் பதிக்கையில்
இறந்துப் போன இதயம் மீண்டும் துடிக்குதே......

நீ சந்தனம்......

உன்னருகில் நெருங்கும் போது ஏனோ?...
நெஞ்சம் படபடவென அடிக்குது...
உன்னழகு விரல்கள் தீண்டயில்
இடியும் மழையும் இதயத்தில் தொடருதே......


உனையே பார்த்து கிறங்கிட
என் விழிகளின் உறக்கம் தொலையுது...
உன் மடியினில் தலைச் சாய்ந்ததும்
புது சுவர்க்கம் மண்ணில் கிடைக்குதே......


மனசு இரண்டும் உரச உரச
உயிரும் தீயாய் எரியுதே...
உன் பூந்தேகம் எனைத் தழுவ
எரியும் தீயும் பனியாய் ஆனதே......

நீ சந்தனம்......

எழுதியவர் : இதயம் விஜய் (21-May-16, 3:27 pm)
பார்வை : 117

சிறந்த கவிதைகள்

மேலே