உன் மனிதனாக வேண்டும்
வார்த்தைகளின் பின்னல் கவித்துவம் ஆனது போல், பணி நல்ல பயணைத் தந்தது போல் என் சிந்தனை உன் காதல் ஆனது.
என் தேடலுக்கு நீ இருக்கிறாய் என்ற சங்கதி கிடைத்தது.
பாலைவனம் சோலைவனம் ஆனது போல், கல் பூ ஆனது பொல், சத்தம் சங்கீதம் ஆனது போல் நான் பரிணமிக்க வேண்டும்.
என் பாதைக்கு இலக்கு தெரிந்தது.
நினைப்பதுலிருந்து அறிந்துகொள்வதற்க்கு சென்றது போல், கருத்துலிருந்து புரிந்துகொள்ளுதலை அடைந்தது போல், கனவுலிருந்து நனவுக்குள் விழித்துக் கொண்டது போல் நான் மேம்பட வேண்டும்.
என் எண்ணத்திற்கு செயலாற்றல் வந்தது.
பொய் மெய் ஆனது போல் நான் மனிதனாக வேண்டும். உன் மனிதனாக வேண்டும்.
இறைவா!