புதியன களைதலும்
நான் நின்ற இவ்விடத்தில்
யாரும் நிற்பர்...
நான் பேசிய மைதானத்தில்
புதுபுல் முளைக்கும்.
நான் தனித்திருந்த
சிலையின் கீழ் நாளை
எவரும் அமரலாம்.
என் சிந்தனை வரிகள்
வேறோர் கவிதையில்
கண்டு அதிசயமாகலாம்.
இன்றென் புதிதெல்லாம்
நேற்று எவரின் பழையதோ?