சிரியா மழலையும் இரத்த மழையும்

மழலை இவர்களது
உணவுக்குழாய்கள்
வறட்சி கொண்டால் நமக்கென்ன???
வா...
நாம் இங்குள்ள
எண்ணெய் குழாய்களுக்கு
பந்தயம் கொள்வோம்
உலகின் பெரியண்ணன் யார்???
நீயா? நானா?
மோதிப்பார்த்திடுவோம்....
ஆனால் இவ்வுலகமோ
நாம் போர் இடுவதற்கான காரணம் கேட்குமே???
மனிதஉரிமை மீறல் என
குரலொலிக்குமே???
சரிசரி...
எடுத்துக்கொள்வோம் மதச்சண்டை எனும் எந்திரத்தை
இணைத்துச் சொல்வோம்
தீவரவாத ஒழிப்பு எனும் தந்திரத்தை
பின் என்ன???
தடைகளின்றி நாம் வான்மழை பொழியலாம்
நீர்த்துளிகளால் அல்ல...
வெடிகுண்டுகளால்....
அரசின் சார்பாக நீ...
கிளர்ச்சியாளர்கள் சார்பாக நான்
இடையில் அமைதி வேண்டி எவரேனும் வந்தால்...அவர்களை
சமாதி கொள்ள செய்திடுவோம்
போரிலே குருதிகள் தெறிக்க
செய்து
நம் வியாபாரம் பெருகச்
செய்திடுவோம்
நம் பொருளாதாரம் வளரச்
செய்திடுவோம்
மொத்தத்தில்....
நாம் சிரித்துக்கொள்வோம்
சிரியா சிதைந்து போகட்டும்

-அ.ஜீசஸ் பிரபாகரன்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (28-Feb-18, 6:52 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 94

மேலே