உன்னை நினைத்து
என் அழகு அழகுத் தேவதையே
உன்னருகே அருகே நான் வருகையிலே
ஆழ்மனம் உன்னைக் கண்டு துடிக்குதடி
அவசரமாய் ஏதோ சொல்ல நினைக்குதடி
தரணியில் பிறந்த தாரகை பெண்ணே
என்னை தவிக்க விட்டு போகின்றாய் முன்னே
உலகில் உன்னைப்போல் அழகி இல்லையே
உண்மையில் இதுவரை யாரும் பிறக்கவில்லையே
முதல்முறை உன்னைப் பார்த்த நொடி
முழுவதும் நினைவிற்குள் நிற்குதடி
இயங்கும் இதயம் ஏனோ ஏங்குதடி
எப்பொழுதும் உனையது விரும்புமடி
உன்னை தினம் நினைத்து உருகுகின்றேன்
என்னுயிரை உனக்கென்று எழுதித் தருகின்றேன்
காதலை விதைத்து நான் காத்திருக்கின்றேன்
கடைசிவரை உன்னுடன் வாழ நினைக்கின்றேன்.....