அத்தனையும் சேர்ந்து ஓர் அதிசய அழகானதோ

நிலவு ஒரு பெண்ணாகி
நிலத்தில் வந்து நடந்ததோ
வான்முகில் கூந்தலாகி
காற்றினில் அசைகின்றதோ
போர் வில் வளைந்து புருவமானதோ
பூமலர்கள் விரிந்து இருவிழிகளானதோ
புன்சிரிப்பு மலர்ந்து நகை முத்தானதோ
அத்தனையும் சேர்ந்து ஓர் அதிசய அழகானதோ !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-18, 4:09 pm)
பார்வை : 103

மேலே