ஆத்தங்கர ஓரத்திலே
ஆத்தங்கர ஒரத்திலே
அந்தி சாயும் நேரத்திலே
மாமன் உன்ன தேடுறேன் புள்ள
மறைஞ்சு ஏண்டி ஓடுற மெல்ல
இங்க எதுக்கு வந்த மாமா
இப்படி இஷ்டத்துக்கு பாக்கலாமா
குளிக்கும் போது நீ வரலாமா
கூவிகூவி என்ன அழைக்கலாமா
அத்த மகளே ஆத்திரம் எதுக்கு
அஞ்சு நிமிசம் நேரம் ஒதுக்கு
ஏழு ஜென்மமும் புருசனா உனக்கு
என்ன எழுதித் தாரேன் உனக்கு
உன் ஆசையெல்லாம் தள்ளி வையி
அடிக்கடி பேசுற நிறய நீ பொய்யி
அடுத்த மாசம் பொறக்குது தையி
வீட்டுக்கு வந்து நிச்சயதாம்பூலம் செய்யி
சீக்கிரமா வந்து போடுறேன்டி பரிசம்
நான் சிவகங்கை சீம மருது வம்சம்
தாலி கட்டுறேன்டி இந்த தை மாசம்
தடுக்க யாரும் வந்தா செஞ்சிருவேன் துவம்சம்......
தாலி கட்டுறேன்டி இந்த தை மாசம்
தடுக்க யாரும் வந்தா செஞ்சிருவேன் துவம்சம்.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
