என் வீட்டு சாளரமே

என்னவனுக்காக
எதிர்பாத்து காத்திருந்த
எந்தன் ஏக்கங்களை
எடுத்து சொல்வது
முதலில் உன்னிடம்தானே
காதலன் என்னை
கடந்த சென்றதும்
பார்க்காமல் போய்விட்டானென
நான் பதறிய அந்த நிமிடங்களை
பகிர்ந்து கொண்டது உன்னிடம் மட்டுமே...
ஒவ்வொரு முறையும்
அவனுக்காக காத்திருந்த என்னிதயத்தை
உன் இரும்பு கம்பிகளின் இடைவெளிக்குள் அனுப்பிவைத்த நினைவுளை
இன்னும் மறக்க முடியவில்லையே..
துணையாக வரவேண்டியவன்
தூரமாக சென்று விட்டானென
நான் துயரப்படுவதைப் பார்த்து
துருபிடித்துவிட்டதோ
உன் இரும்பி கம்பிகளும்
அழுதழுதே....
காதலன் பிரிந்து சென்றபோது
கடந்து வந்த வலியை விட
உனைக் காணும்போதுதான்
கண்ணீர் வடித்துக்கொண்டே இருக்கின்றேன்
என் வீட்டு சாளரமே...