அள்ளித் தந்த பூமித்தாயே

பஞ்சத்துல மனித கூட்டம்
பாதி உயிரு போயிருச்சே
மிச்சம் இருந்த உயிரெல்லாம்
ஊரை விட்டு போயிருச்சே...
பாவப்பட்ட பூமியாகி
பல வருடம் ஆகுதடா
பார்க்கும் இடம் எல்லாமே
வறட்சி ஆட்சி செய்யுதடா...
இருந்தும் கொஞ்ச விவசாயி
இன்னும் இங்கே வாழ்கிறானே
நல்ல நாளை எதிர்பார்த்து
நம்பிக்கையாய் இருந்தானே...

திடீரென்று காற்று வீச
திரண்ட மேகம் மழை தூற
காத்திருந்த மக்கள் கூட்டம்
கண் குளிர்ந்து போனதிங்கே...
வண்டல் மண்ணு நிலமெல்லாம்
வயிறாற நீர் குடிக்க
காய்ந்து போன கரிசல் மண்ணில்
கனமழையும் பெய்தது இங்கே...

ஏர் பிடித்து உழுவதற்கு
ஏற்ற நேரம் வந்தாச்சே
ஊரோடு ஒன்று கூடி
உழைக்கத் தொடங்கி நாளாச்சே...
விவசாயி விதை விதைக்க
விளைஞ்ச நெல்லும் கதிராச்சு
வியர்வை சிந்தி உழைத்ததால
விளச்சல் ரொம்ப பெரிசாச்சு.

உழைத்ததுக்கு கூலி தரும்
உன்னத பூமித்தாயே...
அழியாம விவசாயம் காத்து
அள்ளித் தந்தாய் பூமித்தாயே...

எழுதியவர் : தங்க பாண்டியன் (6-Mar-18, 12:58 pm)
பார்வை : 271

மேலே