சுனாமி 2004
அமைதி காத்த கடலே உனக்கு
ஆனது என்ன,ஆணவம் எதற்கு?
கடலுக்கு கரை இல்லை என,
கண்ணிமைக்கும் நேரத்தில் நிருபித்து விட்டாயே!
நிம்மதி வேண்டி மக்களின் கூட்டம்,
நிமிடம் ஒருமுறை கடற்கரை வருமே.
கடற்கரை வந்த மனிதர்கள் எல்லாம்,
கல்லறை சென்றது உன் சதிதானோ!
கொந்தளிக்கும் உன் அலைகளால்,
கொலைகள் எத்தனை செய்துவிட்டாய்.
மண்ணில் பிறந்த உயிர்களை எல்லாம்,
மரணமாக்கவா நீயும் வந்தாய்.
கடவுள் பூமியை படைக்கும் போதே,
கைப்பற்றி விட்டாய் மூன்று பங்கை.
மூன்று பங்கும் போதாது என்று,
முழு உலகத்தை நீயும் மூழ்கடித்தாயோ!
சமுத்திரம் என்பது உன் பெயர்தான்-
அதில்
சரித்திரம் படைக்கத்தான் சாவுகள் எடுக்கிறாயோ!
சுனாமி என்னும் சூறாவளியாய்
சுயரூபம் உனது,தெரிந்தது இங்கே.
மீண்டும் ஒருமுறை வந்து விடாதே,
மிஞ்சுவதற்க்கு எதுவுமே இருக்காது,உன்னைத் தவிர....