மனிதக்காய்ச்சல் காலம்

ஒழுக்கமீறுதல் இயற்கைதான்..

ஒழுக்கம் கற்றுக்கொடுத்ததாலேயே இயற்கையைவென்று கடவுளானான் மனிதன்.

கடவுள்களின் காலம் காலாவதியாகிவிட்டது..

மீண்டும்
ஆதிகாலத்தின் ஒழுக்கமீறுதல் எனும் இயற்கையின் ஆட்சிகாலமாகிப்போனது இக்காலம்.

ஆனால்,
இக்காலம் இம்முறை இயற்கையல்ல..

காரணம்,
இயற்கை என்றும் மதியுச்சத்திலிருந்து மண்வீழ்ந்து மடிய நினைத்திடாது.,
மாறாக மனிதனே
தானே வீழ்ந்து இயற்கையையும் சேர்த்தழித்துக்கொண்டிருக்கிறான்.

மனிதக் காய்ச்சல் காலமிது.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (9-Nov-17, 12:45 pm)
பார்வை : 95

மேலே