உழவுக்கு உயிர் கொடுப்போம்

உழவுக்கு உயிர் கொடுப்போம்

வற்றாத நதியென்றார்
அகண்ட காவிரி என்றார்

இக்கரைப் பச்சையென்றார்
அக்கரையோ தேடு என்றார்

முப்போகம் விளைந்த மண்ணில்
காவிரியே கடவுள் என்றார்

நஞ்சைக்கு பேர் கொடுத்தார்
புஞ்சைக்கும் நீர் கொடுத்தார்

தஞ்சைக்குப் பாத்தி இட்டார்
நெல்லுக்கு களஞ்சியம் இட்டார்

விதை நெல்லை சோதித்தார்
வினவினால் விஞ்ஞானம் என்றார்

ஊரார் சோற்றுக்கு உப்பிட்டார்
நம் சோற்றில் மண் இட்டார்

உழவனுக்கோ தூக்கிட்டார்
விவசாயம் வியாபாரம் என்றார்

வஞ்சனையில் மிதித்து விட்டீர்
நெஞ்சில் ஈரமும் இல்லையென உணர்த்திவிட்டீர்

சோற்றுக்கு மாய்ந்தக் கூட்டமில்லை
சோறிட்டே மாய்ந்த கூட்டமிது

உப்பிட்ட உழவுக்கு உளமறவா
தமிழ் தேசத்தின் உயிரே உழவனடா

வந்தவனெல்லாம் வாழ்கிறார்கள்
வாழ்பவரெல்லாம் மாய்ந்தே போகிறார்கள்

இறந்தாலும் மண்ணுக்கு உரமாகி போவோம் மண்ணுக்காய் உரமாக்கிடவும் மறவோம்

பிட்டுக்கு மண் சுமந்த முக்கண்ணன் எங்கே
மணல் திருடும் கூட்டமோ இங்கே

ஏன் என்று கேட்க யாருமில்லை
கேட்டு நீதி பெற எங்களுக்கும் நேரமில்லை

போராடி ஓய்ந்ததே என் கூட்டம்
இனி களினிக்காய் ஓர் நாள் போர் முரசும் கொட்டும்..

எழுதியவர் : தமிழ் ப்ரியா (7-Sep-17, 6:28 am)
சேர்த்தது : தமிழ் ப்ரியா
பார்வை : 549

மேலே