மறவேனடா என் கண்ணா

மறவேனடா என் கண்ணா :

கார்மேகம் சூழ்ந்த வான ஆழிக்குள்
வின்மீன் முத்துக்களாய் உன் ஞாபகங்கள்

நினைத்து நினைத்தே பேரலையாய் விழிநீரும்
என் இமைதாண்டப் பாய்ந்து வரும்

வண்ணம் தோய்த்து வரைந்தெடுத்த வானவில்லாய்
கண்முன்னே உன் அழகு முகம்

கால் கடுத்து நடந்தப் பாதையெல்லாம்
என் வாழ்வில் திரிலோகமாய் போனதடா

நீ இசைத்த குழல் இசையோ
செவி தொடும் தென்றலென பேசிடுதே

மயில் இறகாய் உன் விழி வருடும்
ஒற்றைப் பார்வைக்காகக் காத்திருப்பேன் வழியோடு

நீலவண்ண மேனியனே மெய்விழியால் காணும்
கனா உன் நிழலுருவம் தன்னோடு

இவள் இதழ் மலர்ந்து பூத்திருக்க
உன் பூவிழியால் புன்னகைக்க காண்பாயோ

ஆடிக்களிக்க ராதையிவள்
உன் பெயர் பாடிக்கிடக்க மீரா இவள்
காத்திருக்கும் ஆண்டாள் இவள்
உன் ஒருவனுக்கே சீதையிவள்

ஆயிரம் பிறவிகள் என்றாலும்
பல மானுட பிறப்பெடுத்தாலும்
காலங்கள் கோடி கடந்தாலும்
என் வாழ்நாள் இறுதியில் நின்றாலும்
உனை நேசித்தே வாழ்வேனடா
மாய்க்கும் மரணமும் வந்தாலும் மறவேனடா என் கண்ணா...

எழுதியவர் : தமிழ் ப்ரியா (7-Sep-17, 6:33 am)
பார்வை : 175

மேலே