நீயின்றி யாருடனும் பேச பிடிக்கவில்லை

நீயின்றி யாருடனும் பேச பிடிக்கவில்லை :

சொல் மறந்தேன்
என் செயல் மறந்தேன்
உன்னோடு கடந்த நாட்களை மட்டும்
எண்ணியே என் பொழுதுகளைக் கழிக்கிறேன்

பாடல் பிடிக்கவில்லை
அதன் வரிகளும் ருசிக்கவில்லை
உணவும் இறங்கவில்லை
மழையின் வாசமும் மணக்கவில்லை

நீயும் பிரியவில்லை
பிரிவேன் என்ற அறிகுறியும் தெரியவில்லை
ஆயினும் கடந்துவிட்டாய்
கானல் நீராய்

பேச்சில் விரக்தியை உணர்கிறேன்
என் இயலாமையைக் கொண்டு
என் உறவுகளை வெறுக்கச் செய்கிறேன்
உதறவும் செய்கிறேன்

மறக்க நினைக்கவில்லை
உன்னை நினையாமல் இருக்க முனைகிறேன்
முடியவில்லை என்னால்

காற்றில்
பார்வையில்
சுவாத்தில்
பிறர் பேச்சில்
என எல்லாவற்றிலும் உன் சாயலையும், நினைவுகளையும் தான் உணர்கிறேன்.

எப்படி சொல்வேன் பிறரிடம்
உனையன்றி என் உலகம்
தனித்து சுழல்கிறது என்று.

கதறித் துடிக்கும் என் இதயத்திற்கு
நானே சமாதானம் சொல்லிக் கொள்கிறேன்,
நீயின்றி யாருடனும் பேசவும் பிடிக்கவில்லை என்று...

எழுதியவர் : தமிழ் ப்ரியா (7-Sep-17, 6:21 am)
பார்வை : 536

மேலே