பெண்டிராய் பிறப்பதுவே வரம்

பெண்டிராய் பிறப்பதுவே வரம்:

குழந்தையாய்
மகளாய்
சகோதரியாய்
தோழியாய்
மனைவியாய்
மருமகளாய்
தாயாய்
மாமியாராய்
பாட்டியாய்
இதில் எந்த உறவாக இருந்தாலும்
நம்முள்ளே இருக்கும் பெண்மைக்கு
நிகரானது இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை.
பெண்மையை போற்றுவோம்,
பாரதி கண்ட புதுமை பெண்ணாக
பாரினில் பல புதுமைகளை படைப்போம்.
ஆடையில்
அழகில்
பேச்சில்
அலங்காரத்தில்
சிரிப்பில்
பழக்கத்தில்
பொறுமையில்
பற்றில்
வேலையில்
கலையில்
கம்பீரத்தில்
நம் மொழியின் பெருமையையும்
பண்பையும் போற்றுவோம்.
பெண்ணாய் பிறந்த நங்கைகளுக்கும்,
தன்னுள் பெண்மையை உணரும் திருநங்கைகளுக்கும்
மங்கையர் தின வாழ்த்துக்கள்....

எழுதியவர் : தமிழ் ப்ரியா (8-Mar-18, 3:15 pm)
பார்வை : 602

மேலே