கடைசி வரிகள்

விசும்பி விழுந்த மழைத்துளியாய் ஆயிரம் துளிகள்
உன் வாசலில் - என் கண்ணீர்,

பிரிவின் துயர் தாளாமல் என் ஆவியின்
சூட்டில் அவிந்தது - என் இதயம்,

கூட்ட நெரிசலில் சிக்குண்டு திணறித்
தவிக்கும் எண்ணங்கள் - என் மனம்,

சேர்ந்திருந்த நாட்களை மீண்டும் மீண்டும்
ஓட்டிப் பார்க்கும் - என் கனவு,

பார்க்காத நொடிகளை சேர்த்து சேர்த்து
நின்றே போனது - என் கடிகாரம்,

ஓசோன் படலமாய் உன் சுவாசக் காற்றை
மட்டும் வடிகட்டும் - என் நாசி,

நீ இல்லாத நாட்கள் என் நாட்குறிப்பின்
கடைசி வரிகள் - என் மரணம்,

இறந்தாலும் சுற்றிச் சுற்றி உனைத் தேடியே
வந்து சேரும் - என் உயிர்,

உன் துயரம் கண்டு என் துன்பம்
சொல்ல மறந்தேன் - நம் காதல்......

எழுதியவர் : தமிழ் ப்ரியா (22-Feb-17, 12:23 pm)
Tanglish : kadasi varigal
பார்வை : 359

மேலே