ஒரு வாய் சோறு

ஏர்புடிச்சு நானிலிழுத்த என் நிலத்தை எங்கோ காணலடி,
ஏர்கட்டி தானிலிழுத்த என் காளை சோடி மாண்டதடி,
பாட்டுக்கட்டி நான் வளர்த்த நாத்தெல்லாம் வாடுதடி,
பாத்தியில ஓடவிட்ட நீரெல்லாம் வறண்டதடி,
நெல்லடிச்சு உமி பிரிக்க கை தானா ஏங்குதடி,
கரவ மாடு நீர் குடிக்கும் தவிடு காத்தில் பறந்தததடி,
களனி தண்ணி கேட்டு ஏ ஆட்டுக்குட்டி அழுகுதடி,
பாத்தியோர ஆலமரம் நிழல் சாஞ்சி ஓஞ்சதடி, மதயானை தனைபுடிச்சு நெல்லடிச்ச தேசத்துல,
ஒரு பான சோறுக்கேங்கி நிக்கயில தாங்கலடி,
ஊரெல்லாம் வயிற் நிறஞ்சு உறங்கும் ராவேளையில,
என் ஊட்டுக்குள்ள மட்டும் பசி சத்தம் கேக்குடி,
தூக்கம் கலஞ்சி அழுகையில புள்ள குடிக்க பால் இல்ல
தாகம் எடுத்து தேடயில குடிக்க சொட்டு நீர் இல்ல,
ஏ பொழப்பு இப்படியும் ஆகும் கனா நான் கானலியே,
என் வம்சம் இப்படி தான் மாண்டுபோகுமோ தெரியலையே,
இன்னும் ஒரு சென்மம் இருந்தா விவசாயியா பொறக்கனும்,
கழனியெல்லாம் நெல் அடுச்சு ஊருக்கே சோறு போடனும்....நன்றி,
தமிழ் ப்ரியா....

எழுதியவர் : தமிழ் ப்ரியா (28-Dec-18, 2:59 pm)
சேர்த்தது : தமிழ் ப்ரியா
Tanglish : oru vaay soru
பார்வை : 117

மேலே