என்று நமக்கு தெளியும்

ஒன்பது ஓட்டை தேகம்
ஒரு நாள் தீயில் வேகும்.
இன்பம் எல்லாம் பொய்யே!
இம்மையின் தோற்றபிழையே!
வெளியே போகும் மூச்சு
உள்ளே வராம போனால் போச்சு
அசையும் தேகம் பிணமே !
அழுகி நாறிச் சீதையும்

இருக்கும் வரையில் ஆடும்
வெறுப்பெனும் நெருப்பை கொட்டும்
கருவறுப்பேன் என்று உறுமும்
காற்று போன பின்போ
கல்லறை தேடி ஓடும்

அரசன் ஆண்டியென்றே
அங்கங்கு கூவி திரியும்
அடங்கிய பின்போ அவைகள்
முடங்கி பாடையில் ஏறும்

ஒரு சட்டி தீயில் எரியும்-- ஒரு
கைப்பிடி சாம்பலாய் மாறும்
ஓடும் நதியில் கடலில் கரையும்
ஒன்றுமில்லாமல் ஆகும்

பிறந்து வளர்ந்து அழியும்
பிணக்காம்------ நமக்குள்
எத்தனை எத்தனை அவலம்!
என்றிவை நமக்கு தெளியும்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (18-Sep-19, 12:31 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 63

மேலே