அவள்

ஜதிபேசும் சலங்கையோடு சுரம்
சேர்த்து
இசைக்கோர்த்த அபிநய ஆட்டம்
தன்னை
அள்ளிப் பருகிய கண்களுக்கு
என் நடனம்
தாகம் தீர்த்த குளத்துநீராக
ரசனையாக ரசித்து ஆகா ஓகோ
என்று
புகழ்ந்த யாரும் கலைதேவதை
என கோவில் கட்டுவது இல்லை
எனக்கு
பின்னால் என்னை சுட்டுவது
நடனகாரி அவள் என்று..,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
