அலங்காரம்

கனவுகள் எதிர்பார்ப்புகள்
உள்ளே

என்னை அலங்கரிக்க

ஒவ்வொரு முறையும்

அலங்கார பொம்மையாய்
நான்

கல்யாணச் சந்தை
தரகுகளின்

பொய்மூட்டைகள் சுமந்த
கூட்டம்

தன் பேராசையால்
என்

கனவையும் எதிர்பார்ப்பையும்
அலங்கோலமாக்குவதை

மறந்து விலைப்படியா
அலங்காரப்பதுமையாய்

இன்னும் எத்தனைபேர்
என்னைப் பார்ப்பது

எழுதியவர் : நா.சேகர் (20-Sep-19, 5:30 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : alangaram
பார்வை : 1174

சிறந்த கவிதைகள்

மேலே