உழவால் உலகளப்போம்

ஏர் பூட்டி மண்ணாய்ந்து
உழவும் கூட்ட மறந்து !
ஏவு கனைஏவி விண்ணாயும்
விந்தனை போற்றுவ தேனோ !
பசி மறந்துபிறர் புசிக்க
பயிர் பதித்தஅப் பாவிகளன்றோ !
ஊண் ணளித்துழவா லுலகளந்த
புன் னியர்க ளின்றோ !
தன்னின மலரப்பிறக் குடியழிக்கும்
கன்னி மாக்கள் மந்தையால் !
இன் னுயிர் நீத்துஇம்
மண் ணுலகாக்கு மணிகளாய்!

மண் ணினத்தை ஆணவத்தால்
கண் ணெதிரேயடி யழித்து !
கண் ணறியா மாயைஐ
விண் ணுளவும் விசித்திரத்தை !
அணு வளவும் துறமறந்து
கணு வளவும் வேறருத்து !
கண் காட்டிநம் மவது
கண் கட்டும்தொலை யழித்துநாம் !
இன்றி லியேனும் இரட்டழித்து
ஒன்றாயறம் புரிவோம்! நம்
பண் பாடுணர்ந்து பாரதத்தை
நின்றுத் தழைக்கச் செய்வோமினி !
ஒன்றென்போ மிவ்வுலப் படியளப்பானும்
நின்பசி யழிக்கும் பணியாளனும் !

உழ வறியா அற்பனாய் !
உண வுண்ணு மனிதனாய் ; மா. சங்கர்

எழுதியவர் : மா.சங்கர் (1-Sep-18, 9:47 pm)
சேர்த்தது : ச ங் க ர் ராஜா
பார்வை : 1694

மேலே