ச ங் க ர் ராஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ச ங் க ர் ராஜா
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  14-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Aug-2018
பார்த்தவர்கள்:  915
புள்ளி:  20

என்னைப் பற்றி...

மகா கவியின் அடிப்பற்றும் இளைய கவி !!!

என் படைப்புகள்
ச ங் க ர் ராஜா செய்திகள்
ச ங் க ர் ராஜா - ச ங் க ர் ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2018 11:44 pm

இரு நூறாண்டாய் இருளிலும் தளராது ;
பெருந் திரள் கண்டும் துவளாது ;
இரவு பகலறியாது ; வன்மையும் காட்டாது ;
அகிம்சைக்கு துணையாகி; அண்ணலின் வழியாகி ;
களமின்றி இரத்தக் களறியீந்து அறத்தால்
வீரத்தால் அடைந்த வெற்றி ! என்றும்
பசுமையாய் பொங்கியப் பாரதத்தி லின்றோ
பசியும் பிணியும் தலை விரித்தாட !
ஊழலும் லஞ்சமும் நாடெங்கும் உலவ
உதவாக் கரங்களில் உதவும் மந்திரக்கோல் !
இச்சைக்கு இறையாகி பலர் வாழ்வின்
பிச்சைக்குத் துணையாகி என்றும் கேட்பாறற்று
ஏக்கம் ஏங்கும் மக்கள் நாட்டில்
தூக்கம் என்பதே துக்கமானது ஏனோ?
உரிமையற்ற ஊழல் நாட்டில்

மேலும்

ச ங் க ர் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2020 10:10 am

ஈன்றோனை நல்ல சான்றோனை போற்றி

ஈறடியில் அகில மளந்த வள்ளுவத்தை

தன்வழிப் பற்றித் தனித் தலைமையேற்று

தாய்த் தமிழ் காக்கும் முதல்வவனாய்

தீயதை விளக்கி நல்லதை தேர்ந்து

வீறுநடையிட்டு எழுந்து வா தோழா!



வேற்றுமையில் ஒற்றுமைக் கண்ட பாரதத்தை

ஈன சாதிசமய மாயநிழலைக் காட்டி

பிறப்பின்பால் வேற்றுமை விதை விதைத்து

துண்டாட துடிக்கும் ஆணவ இனத்தின்

செம்மையற்ற செங்கோலினை யெதிர்க்க

எழுந்து துணிந்து நில் தோழா!



கண்டதைக் கேட்டதைத் திரி தரித்து

அரிதார நிழலோனை நின்று யேத்தி

இளைய தலைமையை இறக்கி ஏளனமிட்டு

எதிர்கால கனவை மறைத்துப் புதைக்கும்

அடிமை மரபின

மேலும்

ச ங் க ர் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2019 9:12 am

முப்படை யமைத்துக் களம்கண்ட

மீன்கொடி வேந்தனது தலைநகரம் !

முத்தமிழ்ச் சங்கம் முறையமைத்து

தாய்மொழிப் பேணியத் தமிழ்நகரம் !

மூவேந்தரும் முன்றிட்டு படையமைத்து

முக்குலம் வீற்றிருந்த வீரத்தாயகம் !

அகிலாளும் ஆதிசிவனும் தன்பாதம்

நொந்துத் திரிந்த திருஆலவாய் !

குன்றிலே குடிபுகும் குமரனும்

முதலா யாட்கொண்டக் குன்றகம் !

அறுபடையில் இருபடையும் தானுவந்து

வேலோன் அருளீன்ற “ஆதிமதுரையே” !



ஆயக்கலையை ஆண்டாய் காத்து

அடுத்தத் தலைமுறையேற்றிய மதுராநகர் !

இரவிலும் இமைக்காம. லியங்குவதால்

“தூங்கா நகர்”

மேலும்

ச ங் க ர் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2019 9:09 am

இவ்வுலகரிய பத்தாய் பாடுபட்டு

உயிர்வழியேந்தி ஈன்றா யெனை !

அன்பாலரவனைத்து காத்தாய் தாயே

பிறர்நொந்தால் வெந்தாய் நீயே !

ஆலயம் தொழமாட்டேன் யெனைக்

காக்கு மரணாயென்றும் நீயே !

கனப்பொழுதும் தன்னல. மறந்து

குடில்நலம் பேணிக் காப்பாள் !

என்னணுவும் உனைப் பற்றியதால்

ஏனோ உனக்கொன் றென்றால்

என்னுயிர் நொகுமென் தாயேயுனை

நினையாப் பொழுதன்றி மறவேன் !

உன்னுயிரில் தோன்றிய யானோ

உனை யெண்ணிப் போற்ற

இவ்வெழுப் பிறவியே யன்றி

இந்நாள்ப் பொழுதுக் கானுமோ !

எனினுமென

மேலும்

ச ங் க ர் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2019 9:09 am

எழுபதே ஆயிற்று இந்தியனாய்
எண்ணிலை யின்னும் தமிழனாய் !
தாயகம் காத்திடும் தமிழினமும்
தம்மினம் காத்திட வழியிலையாம் !
ப ன் மொழிப் பேறுபெற்றப் பாரதமும்
தொல்த்தனி மொழியினை ஒடுக்குவதோ !
புகழெய்தால் ஏற்கும் இந்தியம்
மீள்(ன்)துயரை அனுதின மறப்பதேனோ !
வந்தோனை வருவோனை ஏற்றி
உள்ளோனை உன்னோனை தூற்றியதின்
வினைப்பயனே உன்னாட்டிலே வீட்டிலே
விடுதலையெனும் உரிமையற்ற கை(அக)திகளாய்!
இன்றுமென்றும் பெயராய் இந்தியனாம்
அன்றிலிருந்தே அறம்படைக்கும் தமிழர்களே !



நெஞ்சிட்டுப் போரிட்டால் எவனும்
அஞ்சிட்டு கெஞ்சிடும் புலிகளிடம் !
வெஞ்சுரத்

மேலும்

ச ங் க ர் ராஜா - சகி அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

இது மஹாத்மா காந்தி பிறந்தநாள் கவிதை போட்டி .
கவிதை 15 வரிகளுக்கு மிகாமல் அல்லது 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
இதுவரை வெளிவராத ,சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் ,
தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் ,.
போட்டிகள் குறித்த முடிவு, விதிமுறைகள் போட்டி நடத்துபவர் இறுதி செய்வார். போட்டி குறித்தோ , முடிவு குறித்தோ மாற்ற போட்டியாளருக்கு முழு உரிமை உண்டு .
இது அதிர்ஷ்ட போட்டி அல்ல,. சிறந்த படைப்பை அளிக்கும் ஒருவருக்கு மட்டுமே பரிசு .
ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அளிக்கமுடியும் .
தங்கள் படைப்பு குறித்து வேறு எவரேனும் உரிமை கோரினால் ,. நீங்களே பொறுப்பு. போட்டி நடத்துபவர் பொறுப

மேலும்

தங்கள் சேமிப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள் . 05-Oct-2018 6:03 pm
மிக்க மகிழ்ச்சி... நன்றி அனைவருக்கும்.... 05-Oct-2018 2:27 pm
அனைவர்க்கும் வாழ்த்துக்கள் . என்னை தேர்வு செய்தமைக்கு நன்றி 05-Oct-2018 10:19 am
100 % விதிமுறைகளுக்கு பொருந்தாவிட்டாலும், தலைப்பின் அடிப்படையில் , கவிதை நடையின் அடிப்படையில் கருத்துக்களோடு பொருந்திய 3 படைப்புக்கள் தேர்தெடுக்கப்பட்டு ஊக்கிவிக்கப்பட்டது .இது ஒரு சிறு ஊக்கம் மட்டுமே .... தங்கள் கருத்துக்கு நன்றி . 04-Oct-2018 6:23 pm
மேலும்...
கருத்துகள்

மேலே