எழுந்து நில் தோழா
![](https://eluthu.com/images/loading.gif)
ஈன்றோனை நல்ல சான்றோனை போற்றி
ஈறடியில் அகில மளந்த வள்ளுவத்தை
தன்வழிப் பற்றித் தனித் தலைமையேற்று
தாய்த் தமிழ் காக்கும் முதல்வவனாய்
தீயதை விளக்கி நல்லதை தேர்ந்து
வீறுநடையிட்டு எழுந்து வா தோழா!
வேற்றுமையில் ஒற்றுமைக் கண்ட பாரதத்தை
ஈன சாதிசமய மாயநிழலைக் காட்டி
பிறப்பின்பால் வேற்றுமை விதை விதைத்து
துண்டாட துடிக்கும் ஆணவ இனத்தின்
செம்மையற்ற செங்கோலினை யெதிர்க்க
எழுந்து துணிந்து நில் தோழா!
கண்டதைக் கேட்டதைத் திரி தரித்து
அரிதார நிழலோனை நின்று யேத்தி
இளைய தலைமையை இறக்கி ஏளனமிட்டு
எதிர்கால கனவை மறைத்துப் புதைக்கும்
அடிமை மரபினை கருவருக்க யெங்கும்
ஏறுமுகமாய் எழுந்து நில் தோழா!
நேற்றைய ரத்த சரித்திர மறிந்து
இன்றைய சுமையை சுகமாய் தாங்கி
நாளைய கனவை கருவா யேந்தி
இளைய நாயகனின் அடிவழிப் பற்றி
ஒற்றையாய் அடையயியலா இலக்கை யெட்ட
கற்றையாய் எழுந்து இணைந்துவா தோழா!