ஆதிமதுரை

முப்படை யமைத்துக் களம்கண்ட

மீன்கொடி வேந்தனது தலைநகரம் !

முத்தமிழ்ச் சங்கம் முறையமைத்து

தாய்மொழிப் பேணியத் தமிழ்நகரம் !

மூவேந்தரும் முன்றிட்டு படையமைத்து

முக்குலம் வீற்றிருந்த வீரத்தாயகம் !

அகிலாளும் ஆதிசிவனும் தன்பாதம்

நொந்துத் திரிந்த திருஆலவாய் !

குன்றிலே குடிபுகும் குமரனும்

முதலா யாட்கொண்டக் குன்றகம் !

அறுபடையில் இருபடையும் தானுவந்து

வேலோன் அருளீன்ற “ஆதிமதுரையே” !



ஆயக்கலையை ஆண்டாய் காத்து

அடுத்தத் தலைமுறையேற்றிய மதுராநகர் !

இரவிலும் இமைக்காம. லியங்குவதால்

“தூங்கா நகர்” அடைபெற்ற பெருநகரம் !

ஆடவரை ஆட்கொள்ளும் பெண்டிரும்

அரிதிற் மனமயங்கும் “மல்லிகை மாநகர்” !

கைகொள்ள இயலாத நீர்வளத்தை

வைகையாய் தானேற்ற ஆடல்த்திருநகரம் !

எண்திசைக்கும் உயர்கோபுரமைத்து தன்திசைக்

கோர்த்த “மணிக்கோவில் திருநகரம்” !

ஏருதழுவி வாழ்வில் ஏற்றம்காணும்

குன்றா வீறுகொண்டயெம் “மருதை மாநகரே”!



- வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்

மார்த்தட்டும் மதுரையோன் : மா. சங்கர்

எழுதியவர் : மா. சங்கர் (23-Jul-19, 9:12 am)
சேர்த்தது : ச ங் க ர் ராஜா
பார்வை : 58

மேலே