தமிழக இந்தியன்

எழுபதே ஆயிற்று இந்தியனாய்
எண்ணிலை யின்னும் தமிழனாய் !
தாயகம் காத்திடும் தமிழினமும்
தம்மினம் காத்திட வழியிலையாம் !
ப ன் மொழிப் பேறுபெற்றப் பாரதமும்
தொல்த்தனி மொழியினை ஒடுக்குவதோ !
புகழெய்தால் ஏற்கும் இந்தியம்
மீள்(ன்)துயரை அனுதின மறப்பதேனோ !
வந்தோனை வருவோனை ஏற்றி
உள்ளோனை உன்னோனை தூற்றியதின்
வினைப்பயனே உன்னாட்டிலே வீட்டிலே
விடுதலையெனும் உரிமையற்ற கை(அக)திகளாய்!
இன்றுமென்றும் பெயராய் இந்தியனாம்
அன்றிலிருந்தே அறம்படைக்கும் தமிழர்களே !



நெஞ்சிட்டுப் போரிட்டால் எவனும்
அஞ்சிட்டு கெஞ்சிடும் புலிகளிடம் !
வெஞ்சுரத்தால் பகைவனைக் கையிட்டு
நஞ்சிட்டு வீழ்த்திய ஈழமறவோம் !
எம்மீழக் குரல்க்கேட்டு யிரங்கி
எக்குரலும் ஓங்காதத் தாய்நாட்டில் !
தன்னுரிமை யிழந்து வாழாமல்
தனிநின்று தமிழனாய் வீழ்வதேமேல் !
மொழியின பிரிவினை படைப்போனும்
சாதிமத சாயத்தை ஏற்போனையும்
செம்மையிழந்த செங்கோலை எங்கினும்
சென்றடைந்து எதிர்வோம் “நாம் தமிழனாய் “

- எச்சாயம் பூசினும்,
தமிழ்த்தனிச் சாயம் அழியா மறத்தமிழன் ; மா.சங்கர்

எழுதியவர் : மா.சங்கர் (1-Apr-19, 9:09 am)
சேர்த்தது : ச ங் க ர் ராஜா
பார்வை : 71

மேலே