அன்னை

இவ்வுலகரிய பத்தாய் பாடுபட்டு

உயிர்வழியேந்தி ஈன்றா யெனை !

அன்பாலரவனைத்து காத்தாய் தாயே

பிறர்நொந்தால் வெந்தாய் நீயே !

ஆலயம் தொழமாட்டேன் யெனைக்

காக்கு மரணாயென்றும் நீயே !

கனப்பொழுதும் தன்னல. மறந்து

குடில்நலம் பேணிக் காப்பாள் !

என்னணுவும் உனைப் பற்றியதால்

ஏனோ உனக்கொன் றென்றால்

என்னுயிர் நொகுமென் தாயேயுனை

நினையாப் பொழுதன்றி மறவேன் !

உன்னுயிரில் தோன்றிய யானோ

உனை யெண்ணிப் போற்ற

இவ்வெழுப் பிறவியே யன்றி

இந்நாள்ப் பொழுதுக் கானுமோ !

எனினுமென் உடன்பிறப்பு வழியில்

எங்களை இன்றும் என்றும்

அரணாய் காக்குமென் அன்னைக்கு

" இனிய அன்னையர்தின நல்வாழ்த்துக்கள் !-தாயீன்ற சேயில் ஒன்றாய் :

மா-சங்கர்

எழுதியவர் : மா-சங்கர் (14-May-19, 9:09 am)
சேர்த்தது : ச ங் க ர் ராஜா
பார்வை : 195
மேலே