நீயின்றி நான்

காதலில் கசிந்துருகி
கனவுகளில் தொலைந்து விட்டேன்........!

உன் பாதம் போகும்
பாதைகளில் சருகுகளாய்
சிதறிக்கிடக்கிறேன்..................!!

யாருமற்ற போர்க்களத்தில்
ஒவ்வொரு முறையும்
தோற்றுத்தான் விடுகிறேன்
உன் நினைவுகளின் படையெடுப்பால்............!!!

உயிரற்ற விழிவழியே......
உணர்வற்ற கவிதை
படிக்கிறேன்.........
புரிந்து கொள்ள ஏதும் இல்லாத போதும்
பிரிந்து செல்ல மனமின்றி
கவிதை வரிகளிடையே
தேங்கி விடுகிறேன்................!!!!

விழுந்துவிடவில்லை என்ற போதும்
எழுந்து விட முடியவில்லை............!!!!!

ஏனடா வதைக்கிறாய்.......?

தென்றலுக்கே சாய்ந்து விட்ட
ஆலமரமாய்............
புயல் காற்றுக்கும்
தலை அசைக்கா
புல்வெளியாய்...........
நீயின்றி நானிருக்க!

இரத்தம் கூட செல்ல முடியாமல்
என் இதயம் முழுவதும்
நீயிருக்க
எப்படி வாழ்வேனாட
நீயின்றி............?

எழுதியவர் : சோட்டு வேதா (6-Dec-18, 12:04 pm)
Tanglish : neeyindri naan
பார்வை : 785
மேலே