பொய்த்தாப் போகும்

தொட்டுவிடும்
தூரம்
தான் வானம்
அதைதொடக் கூட
உன்
துணை வேணும்
என்னருகில்
நீ
இல்லா நேரம்
நிலவில்லாத
வானமாய்
என்நிலை மாறும்
பாட்டோடு
சேர்ந்த
இசையாய்
நீயும் நானும்
கலந்திருந்த
இந்த ஊரும்
நீ இல்லாது
போனால்
மயானமாகிப்
போகும்
இப்படி தோனும்
யாவும்
எனைக்கேட்கும்
நம் காதல்
பொய்த்தா போகும்
என்று..,