துணிந்து வாழ்

உன்னை ஒதுக்கியவர்க்கும், ஒதுக்குபவர்க்கும்
முதலில் நன்றியை நீ சொல்லிவிடு!
தனித்துவத்தின் அத்தியாயமே முதலில்
அங்குதான் துவங்குகிறது.

மாலையில் மங்கும் சூரியன் மறுநாள்
காலையில் உதிக்கும் மறவாதே!

நதியின் நடுவில்
பாறைககள் இன்றி
சங்கீதத்தின் ஓசையில்லை தளராதே!

ஒருநாள் வாழ்வும்
மின்மினிப்பூச்சியாய்
ஒளிமங்காமல் வாழ்ந்துவிடு!

கையிலும்,பையிலும்
ஏதுமில்லை என என்னாமல் முயற்சியை
தூண்டிலாக்கி வின்மீனுக்கே தூண்டிலிடு..!!

எழுதியவர் : கவிஞர்.விஜெ (23-Oct-18, 10:36 am)
சேர்த்தது : கவிஞர் விஜெ
பார்வை : 1404

மேலே