இதயம் விஜய்- கருத்துகள்
இதயம் விஜய் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மலர்91 [26]
- Dr.V.K.Kanniappan [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [18]
அழகு.
மீட்டுதே என்னுளோர்.
சில திருத்தங்களோடு..
அசைகொடியின் பூமிசை ஆடுங் கருவண்(டு)
அசையுமுன் கண்களதன் ஆரமுதப் பார்வை
இசைமீட்டும் யாக்கையுள் இன்பருவி பாய்ந்து
நசைகொள்ளும் உன்மத்த நெஞ்சு.
நசை - விருப்பம், உன்மத்தம் - மயக்கம்
நன்று
திருத்தங்களுடன்..
சுவாசக் காற்றில் சுதந்திரக் கொடி :
யுத்தமிட்டுப் பூமிதனை முத்தமிட்ட உயிர்கள்
சத்தமிட்ட ஒருசொல் வந்தே மாதரம்
உறுதியுள்ள நெஞ்சக் குருதிக் குடித்து
உழுநிலம் சிவக்க முன்னோர் தந்த மாவரம்
கண்ணில் தீவிழும் வலியினில் தினம்வெந்து
மண்ணில் சாயும் மரம்போல் உயிரோய்ந்து
விண்ணில் முழங்கும் இடியாய்ப் புரட்சியிலும்
எண்ணில் அடங்காத் தியாகத்திலும் சுதந்திரம்.
கற்றை முகிலாய்ச் சூழ்ந்த காரிருளினை
ஒற்றைச் சுதந்திரத் தீச்சுடர் கிழித்தெறிந்து
அற்றைநாள் புவியில் புதைந்த விதைகளால்
இற்றை மலர்களில் வாழும் எழில் புன்னகை
உடல் நரம்புகளை உருட்டித் திரித்த கயிற்றில்
உதிரம் நனைந்த உருவமிலாச் சுவாசக் காற்றில்
உயர எழுந்து உணர்ச்சி அலைகளில்
உவகை நிறைந்து பறக்கிறது தேசியக்கொடி
தேசப்பற்று இன்றொரு நாளென்று வாழாதீர்
வாசம்தரும் தென்றலாய் வாழ்விலது நிலைக்காது
நுரையாய்ப் பொங்கும் பேச்சில் வேண்டாம்
நுரையீரல் வாங்கும் மூச்சாய்க்கொள் தேசப்பற்று.
ஒற்றை வரியில் அழகிய கருத்து.
என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா
ஆம். ஐயா.
பாழ்+நிலத்து இதன் புணர்ச்சியில் பாணிலத்து.
என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா
மிக இனிது ஐயா.
அடுக்கி வைத்த
ஒவ்வொர் அடுக்கிலும்
சொட்டுகிறது
உவமைத்தேன்... ❤
என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா
இனிதினிது.
மனமெங்கும்
மௌனப் பார்வையின்
காதல் சுவடுகள்...!
மிகவும் சுவைத்தேன் ஐயா.
சிறப்பு. இன்னும் எழுதுங்கள். வாழ்த்துகள்
இனிது. வாழ்த்துகள்
மிகச் சிறப்பு. வரிகளேந்தும் சோகம் மனம் தொட்டது. வாழ்த்துகள்...
இனிது. இன்னும் எழுதுங்கள். வாழ்த்துகள்
மனந்திறந்த கருத்து.
என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திட தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா
என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திட தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள்
எண்சீர் விருத்தம் சிறப்பு ஐயா
பொருள் செம்மை ஐயா
ஆம். உண்மைதான்.
உண்மையான தேடல்களில்
துன்பங்கள் நம்மைப் பின்னோக்கித் தள்ளுவதில்லை.
நிலையாமை... வரிகள் சிறப்பு
உண்மைதான். உரிமையோடு வெளிப்படும் கோபம்.
கையசைவு வளையோசை
கைப்பிடிக்க அழைப்பினும்
வாயசைவுக்குக் காத்திருக்கேன்
வாசற்படி செருப்பாக
மிகச் சிறப்பு. மனக்கடலில் நுரைதளும்பும் அலைகளாய் உணர்வு.