காதல் குருத்து
*காதல் குருத்து*
முக்கண்ணன் வரும்
குருத்தை கண்டேன்
கண்ணனாக நான் செல்ல
தென்னை போல் வளையும்
பெண்ணையும் கண்டேன்.....
கள்ளாய் அவள் விழி என்னை
மதி மயக்க
பதமாய் பதனிபோல் அருந்த முற்பட்டேன்....
அவளும்
தித்திக்கும் கருப்பட்டியை
என் மனதில் ஊட்ட
உணர்ந்தேன் அவளின் இளஞ்சிரிப்பை...
கிட்டிய இனிப்பு
சொட்டும் காதல் கணிப்பு....
-இந்திரா