மாறுமோ வானிலை

நீ தாமரை என்பதால்
என் வாழ்வைச் சேறாக்கிச் சிரித்தாயோ?
நீ சூரியன் என்பதால்
என் வாழ்வை விறகாக்கி எரித்தாயோ?

நீரருந்த வழியின்றிப்
பறவைகள் எல்லாம் கிளம்புதே
தேனுறிஞ்ச முடியாமல்
வண்டுகள் எல்லாம் புலம்புதே

என்னுள் சிவந்து சிவந்து எழுகிறாய்
என்மேல் சிவந்து சிவந்து விழுகிறாய்

நாற்றத்தைச் சுமக்கிறேன்
வாசத்தை இழக்கிறேன்

கரையெங்கும் அலைகள் இறந்த மௌனம்
தரையெங்கும் இலைகள் உதிர்ந்து மரணம்

குப்பையாய் நான்
குப்பைக்குள் நான்

இந்தக் குளத்திற்கு
இந்த மரத்திற்கு
எப்போது பொழியுமோ?
ஓர் அடைமழை.

(உங/சா/உ0ருச)



(இருவர் உரையாடுவது போல் அமைத்துள்ளேன்.)


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (24-Jun-23, 10:33 am)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : maarumo vaanilai
பார்வை : 536

மேலே