எங்கே போகிறது நிலவு

நிலவாடு முகில்புல்லை நிதம்வானில் மேயும்
நிறம்வெண்மை எனும்பாலை நிலம்மீது பீச்சும்
சிலநேரம் புல்லில்லாச் சிரமத்தில் வாடும்
சேர்ந்தொன்றாய் மின்மினியாம் சிறுவருடன் கூடும்
பலநூறு தொலைதூரம் படர்ந்தலைந்த போதும்
பால்வண்ண மேனியெழில் பாழாகா ஆடும்
புலர்வேளை வருகையிலே பிண்ணாக்குத் தேடிப்
புறப்பட்டு போகிறதோ புரியலியே மேலும்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Jun-23, 3:16 pm)
பார்வை : 115

மேலே