நாவால் சுடாதே

நாவால் சுடாதே
××××××××××××××
கடலும் கருவாகி
கருமேகம் மழையாவதும்
பெண்மை தாய்மையாவதும்
படைத்தவன் செயலே

மணநாள் குறித்து
மணமேடை காணலாம்
மாதங்கள் தள்ளிப்போவது
மணமக்கள் கையிலில்லை

குழந்தையின்மை குறையுமில்லை
குழந்தையுள்ளோர் நிறைவானவரில்லை
மலடியென இழுத்துரைத்து
மனவேதனையை ரசிப்போரே

விழாக்களில் ஒதுக்குவதும்
குழந்தையை தொடவிடாததும்
பூனையாய் நரியாய்
கரடியாய் நடத்துவோரே

அவளும் பெண்தானே
ஆண்டவன் படைப்புதானே
நாவால் சுடுவது
நாகரிகம் ஆகாது..

மாற்றுத்திறனாளியாக எண்ணியே
மாற்றுங்கள் எண்ணத்தை
மாறட்டம் அவலநிலை
மார்தட்டி சொல்லுங்கள்

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமென்று

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (23-Jun-23, 9:10 am)
பார்வை : 84

மேலே