கண்ணன் கீதம்- மெய்ஞான விளக்கம்

கண்ணா உன்னமுத குழலிசையில் நான்
என்னை மறந்தேன் மெய்ஞானம் அறிந்தேன்
என்னுள் இருக்கும் என்னை காட்டி
அந்த ஆத்மாவின் வழிகாட்டியாய் விளங்கும்
பரமாத்மா நீயே என்பதையும் இசையாய்
குழலிசையாய் விளக்கிய பரம்பொருளே என்னே
பேரருள் கண்ணா என்சொல்வேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Jun-23, 11:48 pm)
பார்வை : 32

மேலே