அட்டகாஷ்

பாட்டி, என் மனைவிக்கு பையன் பொறந்து மூணு நாளு ஆச்சு. நகரசபையில பேரைப் பதிவு பண்ண கேக்குறாங்க. மருத்துவமனையில் சொல்லிட்டாங்க. பையனுக்கு நீங்களே ஒரு பேரைச் சொல்லுங்க.
@@@@@###
உனக்கு இந்திப் பேரைத் தான் வைக்கணும்னு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிச்சு உன்னோட அப்பன் பிடிவாதமா உனக்கு 'ஆக்காசு'னு பேரு வச்சுட்டான்டா. ஒரு பிள்ளைக்குத் தகப்பன் ஆனபிறகும் தலை கால் புரியாம நீ எல்லா விசயத்திலும் அட்டகாசம் பண்ணீட்டு திரியற பயலா இருக்கிற. உம் பையனுக்கு 'அட்டாகாசு' (அட்டகாஷ்)னு வச்சிருடா. இந்திப் பேரு மாதிரியே இருக்கும்டா ஆக்காசு.
@@@@@@@@
அருமை. அருமை. 'அட்டகாஷ்' அருமையான பேரு பாட்டி. நம்ம சனங்கள் எல்லாம் "அட்டகாஷ் ஸ்வீட் நேம்"னு சொல்லுவாங்க. நன்றி பாட்டி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Akash = Sky

எழுதியவர் : மலர் (4-Jun-23, 10:30 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 52

மேலே