இரண்டும் சாமி பேரு

வாடா தம்பி, மந்திரமூர்த்தி. நல்லா இருக்கியா?
@@@@
உங்க புண்ணியத்தில் நல்லா இருக்கிறேன் அண்ணே.
@@@@
யாரு இரண்டு குண்டிப் பையன்கள்?
@@@@@@
என்னுடைய பிள்ளைகள் தான்.
@@@@@
அப்படியா? நல்லது. அவுங்க பேருங்களும் சொல்லுடா மந்திரம்.
@@@@@@@
பெரியவன் பேரு 'பிரிஜ்'. சின்னவன் பேரு
'பஜ்ரங்'.
@@@@@#
நான் இதுவரைக்கும் இந்த மாதிரி பேருங்களும் கேட்டதே இல்லையே! யாரு இந்த பேருங்கள வச்சது.
@@@@@@@@
நம்ம பாரம்பரிய சோதிடர் இஷ்டலஇங்க சாஸ்திரி. புதுமையான பெயர்கள் மட்டும் அல்ல இரண்டும் சாமி பேருங்கனு சொன்னாரு.
@@@###
சாமி பேருங்களா? நல்லதுடா மந்திரமூர்த்தி. இந்தப் பேருங்களுக்குப் பொருள் (அர்த்தம்) சொன்னாரா?
@@@@@@@#
கேட்டேன். "சாமி பேருங்கடா மந்திரம். அர்த்தம் தெரிஞ்சு என்ன செய்யப் போறே?" உன் சொல்லிட்டாரு.
#######
சரி, சரி. அவர் சொன்னதும் சரிதான். தமிழர்கள் தமிழ்ப் பெயர்களை வைக்கத் கூடாது. அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்கள வச்சுக்கலாம். அதுதானே நம்ம தமிழர்களின் தற்கால நாகரிகம்.
@@@@@@@@@@@####@@@@##@@@@@@@@@@
Brij =Lord Krishna. Bajrang = Lord Hanuman

எழுதியவர் : மலர் (3-Jun-23, 4:20 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : irandum saami peru
பார்வை : 62

மேலே