சந்தியா அந்தியா

வணக்கம் சோசியரே.
@@@@
வணக்கம், வணக்கம். வாய்யா முத்தய்யா. உன் மனவிக்கு குழந்தை பிறந்திருச்சா?
@@@@@
இரட்டைக் குழந்தைங்க ஐயா. இரண்டும் பெண் குழந்தைகள். நேற்றுக் காலைல எட்டு மணிக்கு. அவுங்க பிறந்த நேரம் ராசி பார்த்து பேரு வச்சு சாதக் குறிப்பு எழுதிக் குடுங்க ஐயா.
@@@@@@
(குறிப்பு எழுதி கணித்துப் பார்த்து):
குழந்தைகள் நல்ல நேரத்தில் பிறந்திருக்கறாங்க. அவர்கள் ராசிப்படி ஒரு குழந்தைக்கு 'சந்தியா'னு பேரு வை. இன்னொரு குழந்தையோட பேரு 'அந்தியா'.
@@@@@@
பேருங்களுக்கு பொருள் சொல்லறீங்களா ஐயா.
@@@@@@
பெயர் சூட்டு விழாவுக்கு வர்றபோது சொல்லறேன்.
@@@@@@
சுவீட்டு நேமுங்க ஐயா. நன்றிங்க ஐயா.
@@@@@@@@@@@@@@@@@@########
Sandhya, Andhya = Twilight, Evening, Dusk, Perfection.

எழுதியவர் : மலர் (14-May-23, 10:27 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 62

மேலே