காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 2

2. ஆயாம்மா


வீட்டில் ஒரு அரை டஜன் வேலைக்காரர்கள் இருப்பார்கள். அவர்கள் அல்லாமல் ஆயாம்மா ஒருவர் எப்பொழுதும் இருப்பார்.

ஆம் திலோத்தமா "கஜலெக்ஷ்மி" யை அப்படித்தான் அழைப்பாள். கஜலெக்ஷ்மி தான் திலோவை வளர்த்தவள். திலோ இரண்டு வயது குழந்தையாக இருந்த போது வேலைக்கு சேர்ந்தாள்.

வந்தது என்னவோ வேலைக்கு தான் ஆனால் அன்பிற்கு ஏங்கி இருந்த திலோத்தமா கஜலெக்ஷ்மி யை அரவனைத்துக் கொண்டாள்.

ஆம் திலோத்தமா தான் கஜலெக்ஷ்மி யை அரவனைத்தாள். திலோவின் பாசம் கஜலெக்ஷ்மி யை அந்த வீட்டிலேயே கட்டிப் போட்டு விட்டது.

அதன்பிறகு எத்தனையோ சூழ்நிலைகள் அந்த வேலையில் நீட்டிக்க முடியாததாக இருந்தது ஆனால் இந்தத் குழந்தைக்காக அந்தக் கஷ்டங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டார் கஜலெக்ஷ்மி.

மிகப்பெரிய பிரச்சினை திலோத்தமாவின் தாய் வடிவில் வந்தது.
திலோவின் தாய் பிறப்பால் பஞ்சாபி பெண். திலோவின் தந்தை கோபாலகிருஷ்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கஜலெக்ஷ்மி ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்.

சூழ்நிலை காரணமாக வயிற்றுப் பாட்டிற்காக குடும்பத்தை பிரிந்து இந்த வேலைக்கு வந்தவர்.

அவருடைய பழக்கங்கள் யாவும் திலோவின் தாய் "அம்ரித்வாணி" க்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அமிர்தம் போல் இனிமையாக பேசக் கூடியவள் என்று அர்த்தம் கொண்ட பெயரை வைத்துக்கொண்டு இனிமை என்றால் என்னவென்றே தெரியாது பேசும் குணவதி.

திலோத்தமா கூட யோசித்து இருக்கிறாள் தன் தாயின் குணம் குறித்து.
எதிரில் உள்ள நபரின் மனவருத்தம் பற்றி யோசிக்காமல் வார்த்தையை விடும் அவள் குணம் திலோவுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.

தன் தாய் தந்தை இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்பதை நம்புவது அவளுக்கு எப்பொழுதுமே கடினமான விஷயம் தான்.

காதலுக்கு கண்கள் இல்லை என்று கூறுவது உண்மை தான் போலும் என்று நினைத்துக் கொள்வாள்.

இதனாலேயே திலோத்தமாவுக்கு காதலில் பெரிதாக நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது.

கல்லூரியில் படிக்கும் போது கூட அவள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள்.

அவளுடன் படிக்கும் மாணவர்கள் அவள் காது கேட்கவே, டேய் அது கடிவாளம் கட்டிய குதிரைடா படியாது என்று கமென்ட் பறக்கும்.

எதையெடுத்தாலும் அதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று வேறுபாடு காணும் தன் தாயின் குணம் திலோவுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.

அப்படிப்பட்ட திலோவின் தாய் அம்ரித்வாணி க்கு சுத்தமாக பிடிக்காத கஜலெக்ஷ்மி யை மட்டும் எப்படி விட்டு வைப்பாள்.

கஜலெக்ஷ்மி யை வேலை விட்டு எடுத்துவிட எவ்வளவோ போராடியும் திலோவின் பிடிவாதத்தினால் வேறு வழியின்றி விட்டுக் கொடுத்தாள்.

ஆனால் அதன் பிறகு கஜலெக்ஷ்மி யை விரோதி போல் பாவிக்க ஆரம்பித்தாள். எப்பொழுதும் சிடுசிடுப்புடன் தான் கஜலெக்ஷ்மி முன் தென்படுவாள் அம்ரித்வாணி.

மூச்சுக்கு முன்னூறு முறை ஆயாம்மா, ஆயாம்மா என்று அழைத்தபடி இவளை சுற்றிச் சுற்றி வரும் குழந்தைக்காக இன்னும் எத்தனை கஷ்டம் வந்தாலும் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று இங்கேயே தங்கி விட்டார் கஜலெக்ஷ்மி.


தொடரும்.....


பின் குறிப்பு :-

( திங்கள் மற்றும் வியாழன் என வாரம் இருமுறை இந்த தொடர் கதை பதிவேற்றப்படும். தொடர்ந்து உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் "கவிபாரதீ".)

எழுதியவர் : கவிபாரதீ (11-May-23, 8:17 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 57

மேலே