பன்னி இங்க வா

பன்னி இங்க வா. பன்னி, சீக்கிரமா வா.

@@@@
யாரும்மா பன்னியைத் கூப்படறது? எங்க கிராமத்தி யாரும் பன்றி வளர்க்கிறது இல்லம்மா. நீ வெளி ஊரு பெண்ணா? நீ எதாவது பயிற்சி கொடுத்த பன்றியைத் கூட்டிட்டு வந்திருக்கிறய? "பன்னி, இங்க வா"னு கூப்படற.

@@@@@
ஐயா, நான் ஹங்கேரி நாட்டிலிருந்து வர்றேன். என் கணவர் அங்கு வேலையில் இருக்கிறார். நான் உங்க பக்கத்து ஊரு. உங்க ஊரு மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட வந்திருக்கிறேன்.
@@@@@
சந்தோசம்மா. 'பன்னி'-னு யாரைக் கூப்பிட்ட?
@@@@@@
அதோ பாருங்க. அந்த ஆலமரத்தில் விளையாடிட்டு இருக்கிறவள் எம் பொண்ணு. அவளைத் தான் கூப்பிட்டேன்.
#@@#@#
ஓ..‌‌‌‌‌... அந்தக் கொழுந்தை பேரு தான் பன்னியா? என்னம்மா போயும் போயும் பெத்த கொழந்தைக்கு 'பன்னி'-னா பேரு வைக்கிறது? என்னம்மா தமிழ் பேரு ஒண்ணை வச்சிருக்கலாமே! @######@@
ஐயா நம்ம தமிழ் மக்கள் எல்லாம் இந்திப் பேரைத் தான் குழந்தைகளுக்கு வைக்கிறாங்க. நாங்க ஹங்கேரிப் பேரை வச்சிருக்கிறோம்.
@@@@@@@
என்ன இருந்தாலும் 'பன்னி'ன்னு பேரு வச்சது சரி இல்லம்மா
@@@@@@
ஐயா, 'பன்னி' அழகான அர்த்தமுள்ள பேருங்க.
#@###@#@@
சரிம்மா. உங்க விருப்பம். நலம் உண்டாகட்டும். வளம் பெருக.
######@@#####@#######@@@@@@@@@@
Panni = Favour, grace. Hungarian feminine name.

எழுதியவர் : மலர் (10-Nov-22, 10:50 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 61

மேலே