முண்டா

ஏன்டி அசுவினி நல்ல அழகான பொண்ணு உன்னோட பொண்ணு. அவ பேரு என்னடி?
@@@@@
எம் பொண்ணுப் பேரு 'முண்டா".
@@@@@
என்னது உம் பொண்ணுப் பேரு 'முண்டா'வா? நல்ல வேளை 'அண்டா'னு பேரு வைக்கல. உனக்கும் உன் வீட்டுக்காரனுககும் கொஞ்சங்கூட அறிவில்லையா? அந்தப் பேரைக் காதில் கேக்கறங்க எல்லாம் ரொம்பக் கேவலமாகப் பேசுவாங்கடி.
@@@@@
பாட்டி, 'முண்டா'ங்கிற பேருக்கு அழகான அர்த்தம் இருக்குது. நானும் என் கணவரும் தேடிக் கண்டுபிடிச்சு வச்ச பேரு 'முண்டா'.
உங்களைத் தவிர இந்தப் பேரைக் காதில கேட்டவங்க எல்லாம் "முண்டா இந்திப் பேரு போல இருக்கு. இந்திப் பேருன்னாவே வெரி ஸ்வீட் நேம்"னு பாராட்டறாங்க பாட்டி.
நல்லவேளை என் குழந்தைக்கு தமிழ்ப் பேரை வைக்கல. இனிமையான இந்திப் பேரை வைக்கறவங்களைத் தான் எல்லோரும் பாராட்டறாங்க.
@@#####@@
நம்ம தாய் மொழி மேல் பற்று இல்லாதவங்கதான்டி உன்னைப் பாராட்டுவாங்க.
@@@@@#@@@@@@@@@@@@@@@@@@@@@
Munda = Abode of happiness.
Unisex name. Spanish, German Indian origin