நீயெல்லாம் ஒரு ரவுடியா
ஏன்டா மொந்தை மூக்கையா ஏதுக்குடா அரசியலுக்குப் போன?
@@@@
அண்ணே ஒவ்வொரு தடவையும் ரவுடித்தனம் பண்ணீட்டு கம்பி எண்ணப் போறது எனக்கு பிடிக்கலே.
@@@@@
டேய் மூக்கையா மொந்தை நாம் கூலிக்கு மாரடிக்கிற கூட்டம்டா? அரசியலுக்குப் போயி நம்ம ரவுடிங்க இனத்துக்கே பெரிய அவமானத்தை தன் தேடிக் குடுத்திட்டயே. ச்சீ. உன்னால நாங்க....
@@@@@@@
அண்ணே நமக்கு முன்னுரிமை குடுத்து சேர்க்கிற கட்சில சேந்துட்டேன். எனக்கு ஒரு செல்பேசி இலவசம். மளிகைப் பொருள்கள் காய்கறி இலவசம். ஒரு மோட்டார் சைக்கிளில் கட்சிக் கொடியைக் கட்டிட்டு ஒரு நாளைக்கு அஞ்சு மைல் சுற்றளவு உள்ள பகுதில இருக்கிற வீதி, தெரு, சந்து பொந்து எல்லாம் அஞ்சு தடவை சுத்தி வரணும். பெட்ரோல் இலவசம். செல்பேசிக் கட்டணத்தை கட்சியே கட்டிடும். கைச்செலவுக்கு மாசம் பத்தாயிரம் ரூபா. எப்பவாவது தேவைன்னா பத்து ரவுடிங்களைக் கூட்டிட்டு வரச்சொல்லுவாங்க. வெள்ளிக்கிழமைகள்ல அரசியல் பொய்களைப் பேசக் கத்துக் குடுப்பாங்க. இதுக்கு மேல என்ன அண்ணே வேணும்?
@@@@@
டேய், டேய் மொந்தை மூக்கையா. நீ சரியான முடிவை எடுத்திருக்கிறீடா. நமக்கு பாதுகாப்பு அரசியல்தான்டா. என்னோட தலைமையில் பல பகுதிகள்ல ரவுடித்தனம்
செய்யற முப்பது ரவுடிகளும் நானும் நீ சேர்ந்திருக்கிற கட்சில சேர்ந்து கவுரவமா, பாதுகாப்பா தேவைப்பட்ட போது ரவுடித்தனம் செய்யலாம்டா. சிபாரிசு பண்ணி எங்களையும் அந்தக் கட்சில சேத்துவிடுடா.
@@@@@@@
ரொம்ப சந்தோசம் அண்ணே. நீங்க ரவுடிங்க தலைவர்னு சொன்னாப் போதும் மாலை போட்டு வரவேற்பாங்க அண்ணே.