கண்ணன் எங்கே

ஹலோ, S. கண்ணன் இருக்காரா?
இல்லைங்க. வேலை செய்யாம தப்பிக்க, ஊருக்குப் போயிருக்காரு.

அங்கே கண்ணனோட சித்தப்பா, C. கண்ணன் இருக்காரா?
இல்லங்க. அவர் சுண்டுவிரலில் சின்ன அடிபட்டுக்கொண்டு, பெரிய ஆஸ்பத்திரி போயிருக்காரு.

கண்ணனோட மாமா, M. கண்ணன் இருக்காரா?
இல்லங்க. அவர் தலையில் இரண்டு முடி தெரிந்ததால், சலூனுக்கு முடிதிருத்தம் செய்யப் போயிருக்கார்.

கண்ணன் வீட்டில் குடியிருக்கும், Vaa.கண்ணன் வீட்டில் இருக்காருங்களா?
கண்ணன் வீட்டைக் காலி செய்துவிட்டு, பத்து நாள் வாடகை கொடுக்காம, வேறு வீட்டுக்குப் போய் பத்து நாளாகுது.

கண்ணன் வீட்டிற்குப் புதிதாக, யாரவது குடித்தனம் வந்திருக்காங்களா?
ஆமாங்க. O. கண்ணன்னு சொல்லிக்கொண்டு ஒல்லியா ஒருத்தர் இன்னிக்குதான் ஒண்டியாக ஒரு பெட்டியுடன் குடி வந்திருக்கார்.

நீங்க பேசுவதைக் கேட்கும்போது உங்கள் பேர்கூட கண்ணன் என்று தோன்றுகிறது.
ஆமாங்க. என் பேரும் கண்ணன். N. கண்ணன். கண்ணன் வீட்டுப் பக்கத்து வீட்டில் இருக்கேன்.

கண்ணன் வீட்டில் உங்களுக்கு என்ன வேலை?
எங்க தாத்தா T. கண்ணன், ஓசி பேப்பர் படிக்கவேண்டும் என்று கேட்டார். அதை எடுத்துப்போகத்தான் S.கண்ணன் வீட்டிற்கு வந்திருக்கேன். ஆமாம், நீங்க யாரு?

நான் கண்ணனோட ஒன்று விட்ட நண்பன் கண்ணனின், இரண்டு விட்ட சின்ன தாத்தா, Z. கண்ணன் பேசுறேன்.

(ஓசி பேப்பர் வாங்க வந்த கண்ணன், தொலைபேசியைத் துண்டித்துவிட்டு, பேப்பரை கீழே போட்டுவிட்டு, அவர் வீட்டிற்கு ஓடிவிடுகிறார்)

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (13-Nov-24, 4:41 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : Kannan engae
பார்வை : 31

சிறந்த நகைச்சுவைகள்

மேலே