புல்லாங்குழல் - சின்னக் கண்ணாடி
புல்லாங்குழலும் சின்னக் கண்ணாடியும் எங்கடி தங்கம்?
@@@@@
இது என்ன கேள்விடீ நிஷா (Night) இரவுத் தோழி?
@@@@@
என் பேருக்கு அர்த்தம் தெரிஞ்சிட்டு என் பேரைக் கிண்டல் செய்யறாடி தங்கம்?
சரி என் கேள்விக்கு என்ன பதில்?
@@@@@@
எங்கள் 🏠🏠 வீட்டில் புல்லாங்குழல் கிடையாது. அதை வாசிக்கவும் தெரியாது. சின்னக் கண்ணாடி மேசை மேல் இருக்குது. பெரிய கண்ணாடி சுவற்றில மாட்டப்பட்டிருக்குது. உன் கேள்வி அபத்தமானது. சின்னக் கண்ணாடியும் புல்லாங்குழலும் காணாமல் போகுமா?
@@@#@##@
நான் கேட்டது உங்க வீட்டில் உள்ள சின்னக் கண்ணாடியும் புல்லாங்குழலும் தான்.
#@@####
அடியே தோழி இரவு, உன் கேள்விக்கு முன்பே பதில் சொல்லிட்டேன். மேற்கொண்டு முட்டாள்தனமான பேசாதடி.
@@@####
நீ பெத்த புல்லாங்குழலும் சின்னக் கண்ணாடியும் எங்க?
#@@@###
என்ன நெனச்சிட்டு இதுமாதிரி கேட்கிறார்?
@@@@@
சரி. உன் இரட்டைப் பெண் குழந்தைகளின் பேருங்களச் சொல்லு.
@@@@@@
மூத்தவ சனிகா. இரண்டாவதாப் பொறந்தவ பேரு பனிகா. இந்தப் பேருங்களுக்கு என்னடி குறைச்சல். நம்ம மாநகரத்தில் யாருமே அவுங்க குழந்தைங்களுக்கு வைக்காத அருமையான, அழகான, இனிமையான இந்திப் பேருக்கு. உனக்கு பொறாமைடி இரவு.
@#####
அடியே தங்கம். உன் மூத்த குழந்தை பேருக்கு 'புல்லாங்குழல்'னு அர்த்தம். இரண்டாவது குழந்தையோட பேருக்கு 'சின்னக் கண்ணாடி'னு அர்த்தம்.
@@######@
ஐய்யய்யோ. இந்தப் பேருங்களோட அர்த்தம் தெரிஞ்சா என் குழந்தைகள் பற்றில் படிக்கிற போதே அவுங்க கூடப் படிக்கிற பிள்ளைகள் எல்லாம் "'புல்லாங்குழல்'உம் 'சின்னக் கண்ணாடி' வருதங்கடி/வருதுங்கடா"'னு கிண்டல் பண்ணுங்களே. நான் என்ன செய்வேன். முட்டாள்தனமா அந்தச் சோதிடர் பேச்சைக் கேட்டு இந்த இந்திப் பேருங்கள வசஂசுட்டனே.
@#####
பரவாயில்லைடி தங்கம். என் அண்ணன் வழக்குரைஞர். உனக்கு பிடிச்ச தமிழ்ப் சேருங்கள் எழுதிட்டு வா. ஒரு முத்திரைத் தாளில் குழந்தைகளின் பெயர் மாற்றைத் எழுதி என் அண்ணன் முன்னிலையில் கையொப்பம் இட்டுக் கொடு. அவர் கையொப்பம் இட்டு தனது முத்திரையை முத்திரைத் தாளில் குத்தி உன்னிடம் கொடுப்பார். அதை அரசு அச்சகத்தில் கொடுத்து கட்டணத்தைக் கட்டினால் அடுத்த அரசிதழில் உன் குழந்தைகள் பெயர் பதிவாகி வெளிவரும். உனக்கு தேவையான பிரதிகளை வாங்கி வச்சுக்க. பற்றில் சேர்ந்தபோது ஒரு பிரதியை பிறப்புச் சான்றிழோடு கொடுத்தால் பள்ளியில் தமிழ்ப் பெயர்களுடன் உன் குழந்தைகளைச் சேர்த்திடலாம்.
@@@@@@
மிக்க நன்றி தோழி நிஷா இரவு.
*******************************"***"""""""""""*********"
Sanika = Flute. Indian origin. Feminine name.
Panika = Small mirror. " " " ". ". ". " " " ". " " "