மகிழ்ச்சி என்னும் அனுபவம்

மகிழ்ச்சி என்னும் அனுபவம்

இயற்கையுடன் ஒன்றி மாலை சூரியன் கிரணங்களைக் குறைக்க
இறைவனை நினைத்து அவன் மாயையை எண்ணி வியக்கையில்
கண்ணிற்கு விருந்தாக அந்திவானம் வர்ணஜாலங்களைக் காட்டிட
அமைதியாக இருந்த மாலை பொழுது மாறி மரயிலைகள் சலசலக்க
அருமையான இசை கேட்கும் விதமாய் அந்த ஓசை என்னைக் கவர
அழகிய அந்த மாலையில் மென்மையான காற்று அவ்வழி வீசிட
அமர்ந்த இடம் சிறு சொர்க்கமாக மாறிய அந்த சில நிமிடங்கள்
கண்கள் மூடிக்கொண்டு உட்கார்ந்து கனவுகள் காண விழைகையில்
கால்கள் தனியாக அந்திரத்தில் விண்ணை நோக்கி மிதந்திட
மனம் எதை எதையோ எண்ணி தன்னை மறந்து காற்றாக பறந்திட
இனம்தெரியாத ஒரு இனிமையான பயணம் உடம்பில் வந்திட
இமை இரண்டும் மூடும் நேரம் சொல்ல முடியாத இன்ப அனுபவம்

எழுதியவர் : கே என் ராம் (11-Nov-24, 7:46 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 38

மேலே