கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 6 பா 26 27 28 29 4

கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 6 பா 26 27 28 29

26.
விருப்பம் சினம்தனை முற்றும் விடுத்து
அருமனத்தை நன்கடக்கி ஆத்மநல் ஞானம்
வரப்பெற்ற சந்நியாசி இம்மை மறுமை
இரண்டிலும் ஜீவன்முக் தன்

27.& 28

வெளிவிஷ யங்கள் வெளியே நிறுத்தி
ஒளிக்கண் புருவத்தின் மத்தியில் நோக்கிட
மூக்கில் பிராண அபானவாயு வைநிறுத்தி
ஐம்புலன் புத்திமனம் தன்னை அடக்கியே
முத்தி குறிக்கோளாய் இச்சைபயம் வெஞ்சினம்
அத்தனையும் விட்டு முனிவனாய் ஆவோனே
முத்தன் எனப்படுப வன்

29 .
நல்வேள்வி நற்தவசு தன்னை அனுபவிப்போன்
எல்லா உயிருக்கும் நண்பன் உலகீசன்
நல்லான்நான் என்றே எனைஅறி கின்றவன்
தொல்லையிலா சாந்திபெறு வான்

----கீதை வெண்பா சந்நியாச யோகம் எனும் 5 வது அத்தியாயம் முற்றும்----

எழுதியவர் : கவின் சாரலன் (11-Nov-24, 6:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 12

மேலே