கல்லுக்கு உண்டோ ஈரம்

ஒரு கருங்கல்லை
ஒருபோதும் காதலிக்காதீர்கள்;
ஒருக்கால்
காதலித்துவிட்டால்
கல்லுக்குள் ஈரங்காண
கட்ட வேண்டியிருக்கும்
உங்கள் கண்களில்
ஒரு கல்லணை!

ஒரு கருங்கல்லை
ஒருபோதும் மணம்புரியாதீர்கள்;
ஒருக்கால்
மணம்புரிந்துவிட்டால்
கல்லுக்குள் ஈரங்காண
தனக்குத் தானே
கட்ட வேண்டியிருக்கும்
ஒரு கல்லறை!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (11-Nov-24, 1:27 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 70

மேலே