மழையின் வாழ்வு -கங்கைமணி

வெள்ளிப்பனியென
விழும் பெரும் துளியென
கண்ணில் திரையென
காற்றின் துணையென
சட சட இசையென
சலனமும் நானென
வானக்கொடையென
வானவர் வரமென
உழவர்தம் உயிரென
உயிர்தரும் உயர்வென
சமத்துவம் பாரென
சமதர்ம வேரென
நீர்க்கணை நானென
நிலம்தொடும் போரென
பொழியுது மழை
பெரும் இறைவனின் கலை!

நீர்த்துளி சேருது
நிலத்தினில் உருது.,
நிலம்தொட்ட நீரதன்
நிறத்தினை மாற்றுது.
நதிகளாய் பிறக்குது
நளினமாய் நெளியுது.
நீர்விழும் அதிசயம்
அருவியாய் ஜொலிக்குது.
தரையினில் வெடிப்புகள்
தழுவலில் குலையுது.
தழும்புகள் மறையுது.
புற்களும் பிழைக்குது
பெரும் சிறு மரங்களும்
தலைக்குது சிலிர்க்குது!.
காய்களும் கனிகளும்
கருக்கொண்டு பெருக்குது.
நீர் நிலை பாத்திரம்
நிறம்பியே வழியுது.
நேர்வழி மழைத்துளி
நிலம்பார்த்து ஓடுது
நிலையற்ற மானிட
நெஞ்சம்போல் மாறுது.
காடுகள் மேடுகள்
கடந்ததன் பயணங்கள்
கருமத்தின் பயனென
விதிவிட்ட வழியென
விதியதன் செயலென
ஈரப்பதன் திசையினில்
ஏற்ப்புடன் விரைந்திடும்
நீரதன் செயலினில்.,
இயக்கமும் நானல்ல
இயக்குவார் தெரியல
வாழ்வதன் நிதர்சனம்
வா வந்து பாரென
வாழ்ந்தது காட்டுது
வியப்பினை கூட்டுது.

நிழல் கண்டு நிர்க்கல
வெயில் கண்டு ஓடல
நித்திரை அதற்கில்ல
சத்தியம் தவறல.
கொதிப்பையும் தாங்குது
குளிரையும் ஏற்குது
கழிவுகள் கலக்குது
பூக்களால் மனக்குது
கோவமும் அதற்கில்ல
குணத்தையும் மாத்தல

உழவனின் வாழ்வினை
உயர்த்திய நீரது ..,
தாயவள் மடிகண்டு
தாவிடும் குழந்தையாய்..,
தலைவனின் கரம் சேர்ந்து
தழுவிடும் தலைவியாய்...,
சமுத்திர தாய்மடி
பாய்ந்தது சேருது
சலனமும் அடங்குது.
பயணமும் முடியுது!.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (5-Aug-17, 3:55 am)
பார்வை : 419

மேலே