நதியோர நாணல்
நதியோரத்து நாணலை
எள்ளி நகையாடியது
அருகிலிருந்த
நெடிதுயர்ந்த மரம்!
ஒரு மழைக்காலத்தில்
ஆரவார இரைச்சலோடு
பெருவெள்ளம்!
பெருவெள்ளத்தின்
போக்கில்
போய் கொண்டிருந்த
நெடுதுயர்ந்த மரத்தின்
பார்வையில்
வணங்கினால் வாழலாம்
உணர்த்தி கொண்டிருந்தது
நதியோரத்து நாணல் !
கவிஞர் கே. அசோகன்.