கனவிலும் கண்ணீர்
கதிரவன் கைபட்ட காலை நேரத்தில்
கன்னட காவேரி கரையோரத்தில்
கடக்கும் கலியுக தூரத்தை
கண் திறந்து கனவு கண்டேன்
கனவில் ஆறும் வந்தது
கண்ணில் நீரும் வந்தது...
ஆம்
ஆறு அடி வளர்ந்து என்னபயன்
ஆறு அறிவு பெற்று என்னபயன்
ஆறின் குணம் அனு அளவும்
வரவில்லையே எனக்கு,.!
ஓய்வது சமுத்திரம் என்றாலும்
ஓடும் வரை சரித்திரம் படைக்கிறது ஆறு
சாய்வது சமாதி என்றாலும்
சாகும் வரை சாதனை படைப்பது யாரு..?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
